1 லட்சம் குடும்பத்திற்கு சோறு போடும் அமிதாப் பச்சன்..!

மும்பை: கொரோனா ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் 1 லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு, ஒரு மாதத்திற்கான உணவு பொருட்களை வழங்குவதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உறுதி அளித்துள்ளார்.

கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதுடன், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், அதனை மட்டுமே நம்பியுள்ள சினிமா தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

எதிர்பாராத சூழலில் நாம் இருக்கும் நிலையில், திரு. அமிதாப் பச்சன் மற்றும் வி ஆர். ஒன் ஆதரவுடன் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் மூலம், நாடு முழுவதும் ஒரு லட்சம் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்களை அளிக்க உள்ளோம் என சோனி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.