கொரோனா அச்சுறுத்தல்: மாவட்ட எல்லைகள் மூடல்

சென்னை: கொரோனா பாதித்த மாவட்டங்களை முடக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியபடி, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட எல்லைகள் மூடப்படுகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதித்த 75 மாவட்டங்களை முடக்க அந்தந்த மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முடக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த பட்டியலில் திருநெல்வேலி, கோவையும் சேரும் என கூறப்படுகிறது. ஆனால், தமிழக அரசு சார்பில் மாவட்டங்களை முடக்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.